அன்வார் எல்லை மீறுகிறார்! முன்னால் தலைமை நீதிபதி!

- Sangeetha K Loganathan
- 21 Apr, 2025
ஏப்ரல் 21,
நீதித்துறை சார்ந்த முக்கிய முடிவுகளில் அன்வார் தலையிடுவதால் பிரதமராக அன்வார் அவரின் எல்லையை மீறி செயல்படுவதாக முன்னால் தலைமை நீதிபதி TUN ABDUL HAMID MOHAMAD இன்று தெரிவித்தார். நீதி மன்றங்களில் நியமனம் பெறும் நீதிபதிகளும் துணை அரசு வழக்கறிஞர்களும் மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஆளுமையால் நியமிக்கப்பட வேண்டும் என்றும் சமீபக் காலமாக நீதித்துறையுடன் தொடர்புடைய முக்கிய நியமனங்களில் அரசாங்கத்தின் தலையீடும் முக்கிய அமைச்சர்களின் தலையீடும் இருப்பதாக முன்னால் தலைமை நீதிபதி TUN ABDUL HAMID MOHAMAD குற்றம் சாட்டினார்.
அன்வாரின் தலைமையில் உள்ள அமைச்சர்களின் தலையீடுகள் இருப்பதைக் காட்டிலும் பிரதமர் அன்வாரின் தலையீடு நீதித்துறை சார்ந்த நியமனங்களில் இருப்பதாகவும் இது பிரதமருக்கு இருக்கும் வரம்பை மீறுவதாகவும் முன்னால் தலைமை நீதிபதி TUN ABDUL HAMID MOHAMAD கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் துறையின் செயல்பாடுகளைப் பிரதமர் அன்வார் கண்காணிக்கும்படியும் மற்ற அமைச்சுகள் சட்டத்துறை சம்மந்தப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும் அன்வார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னால் தலைமை நீதிபதி TUN ABDUL HAMID MOHAMAD வலியுறுத்தினார்.
Bekas Ketua Hakim Negara, Tun Abdul Hamid Mohamad mendakwa Perdana Menteri Anwar Ibrahim telah melangkaui batas dengan campur tangan dalam pelantikan kehakiman. Beliau menegaskan pelantikan hakim dan pendakwa raya perlu kekal di bawah kuasa Yang di-Pertuan Agong tanpa campur tangan politik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *