புத்ரா ஹைட்ஸ் மாணவர்களுக்கு ரேப்பிட் பேருந்து வசதி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 7: புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயாவில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 76 மாணவர்களை இரண்டு தற்காலிக நிவாரண மையங்களிலிருந்து சுபாங் ஜெயா பகுதியைச் சுற்றியுள்ள 19 பள்ளிகளுக்கு கொண்டு செல்ல ஐந்து ரேபிட் கேஎல் ஆன்-டிமாண்ட் வேன்கள் இன்று உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட 42 தொடக்கப்பள்ளி மாணவர்கள் மற்றும் 34 மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இந்த வசதியைப் பெற்றனர்.
நிறுவனம் மாவட்ட கல்வி அலுவலகம் (பிபிடி) மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் போக்குவரத்து செயல்முறையை சீராக உறுதி செய்வதற்காக முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக மத்திய பிராந்திய ரேபிட் பேருந்து சேவையின் தலைவர் கைருல் அசார் ஹமிதுலா இன்று காலை பெர்னாமாவிடம், தெரிவித்தார்.
இந்த முயற்சி யயாசன் இஸ்லாம் தாருல் எஹ்சான் (YIDE), பெட்டாலிங் பெர்டானா PPD, சமூக நலத்துறை மற்றும் பிரசாரனா மலேசியா பெர்ஹாம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

76 murid yang terkesan akibat kebakaran paip gas di Putra Heights dipindahkan ke 19 sekolah sekitar Subang Jaya menggunakan lima van Rapid KL hari ini. Inisiatif ini melibatkan kerjasama YIDE, PPD Petaling Perdana, JKM dan Prasarana Malaysia bagi memastikan kelancaran urusan persekolahan pelajar terjejas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *