எதிரே வந்த லோரி மீது மோதிய கார் ஓட்டுநர் பலி!

- Muthu Kumar
- 18 Apr, 2025
(கோகி கருணாநிதி)
கூலாய், ஏப்.18-
ஜொகூர் பாரு-ஆயர் ஹீத்தாம் சாலையின் 47ஆம் கிலோமீட்டரில் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என நேற்று ஒரு போலீஸ் அறிக்கையில் கூலாய் மாவட்ட காவல்துறை தலைவர் ஏ.சி.பி பஹாரின் நோ தெரிவித்தார்.
நேற்று காலை 11.45 மணியளவில் ஜொகூர் பாருவை நோக்கிச் சென்ற ஒரு டொயோட்டா வியோஸ் காரில் பயணம் செய்த 76 வயது உள்ளூர் நபர் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் எதிரே வந்த லோரி வழியில் நுழைந்துள்ளது. இதன்போது எதிரே வந்த ஹொஹன் வகை லோரி, 55 வயதான உள்ளூர் நபர் ஒருவரால் ஓட்டப்பட்டு வந்தது. காரை தவிர்க்க முடியாமல் நேரடியாக மோதி விபத்துக்கு காரணமானது.
இந்த விபத்தில் காரை ஓட்டியவர் தலையில் கடுமையான காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த 68 வயது மற்றொரு நபருக்கும். லாரி ஓட்டுநரும் சாதாரண காயங்களுடன் உயிர்தப்பினர்.
உயிரிழந்தவரின் உடல் பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக கூலாய் தெமெங்கோங் ஸ்ரீ மகாராஜா துன் இப்ராஹிம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த விபத்து குறித்து கூலாய் மாவட்ட போக்குவரத்து விசாரணைப் பிரிவு, 1987 ஆம் ஆண்டுக்கான சாலை போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 410 கீழ் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல் உள்ளவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் அஹ்மட் சபுவான் அபு நைம் என்பவரை 017-7573507 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அல்லது கூலாய் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேரில் அறிவிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Seorang lelaki tempatan berusia 76 tahun maut dalam kemalangan di Kilometer 47, Jalan Johor Bahru-Ayer Hitam. Keretanya hilang kawalan dan bertembung dengan lori. Dua lagi mangsa cedera ringan. Siasatan sedang dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *