ஹரி ராயா கொண்டாட்டம்!- சுமார் 20 லட்சம் வாகனங்கள் கிளந்தானுக்குள் நுழையும்

- Shan Siva
- 17 Mar, 2025
கோத்தா பாரு, மார்ச் 17: வரவிருக்கும் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி
கொண்டாட்டங்களின் போது சுமார் 20 லட்சம் வாகனங்கள் கிளந்தானுக்குள் நுழையும் என்று
சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
பாசிர் பூத்தே, குவா முசாங் மற்றும் ஜெலி
வழியாக வரும் வரும் வாகனங்களால் மார்ச் 28 ஆம் தேதி கொண்டாட்டங்களுக்காக பயணிகள் வீடு திரும்பும்போது போக்குவரத்து
நெரிசல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 28 வெள்ளிக்கிழமை முதல்
மாநிலத்திற்குள் செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து அதிகமாக
இருக்கும் என்று அத்துறை தெரிவித்துள்ளது.
கூடுதலாக, போக்குவரத்தைக் கண்காணிக்கவும் சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும் 187 அதிகாரிகள் மற்றும் அமலாக்கப் பணியாளர்கள் ஓப் ஹரி ராயா ஐடில்ஃபித்ரியின் ஒரு பகுதியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Jabatan Pengangkutan Jalan menjangkakan sekitar 2 juta kenderaan memasuki Kelantan sempena Hari Raya Aidilfitri, dengan kesesakan bermula 28 Mac. Laluan utama seperti Pasir Puteh, Gua Musang, dan Jeli dijangka sesak, sementara 187 pegawai ditugaskan bagi pemantauan lalu lintas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *