டத்தோஸ்ரீ சுல்கிப்ளியின் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு!

- Muthu Kumar
- 16 Apr, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
கோல சிலாங்கூர். ஏப்.16-
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அமாட் தமது தொகுதி வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நடத்தினார். கோல சிலாங்கூர் நாடாளுமன்ற மக்கள் மையத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் இரவு ஈஜோக் டத்தாரான் பசார் மாலாம் பகுதியில் நடைபெற்ற இந்த உபசரிப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக அதன் அலுவலகப் பிரதிநிதியும் நகராண்மைக் கழக உறுப்பினருமான அருள் செல்வி நாதன் தெரிவித்தார்.
தமது தொகுதியில் வசிப்போர் யாரும் இந்த உபசரிப்பில் விடப்படக்கூடாது என்று மக்கள் மையத்தின் அதிகாரிகளிடம் தாம் அறிவுறுத்திக் கேட்டுக் கொண்டதாக டத்தோ ஸ்ரீ சுல்கிப்ளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.மடானி அரசின் ஜாலினான் பெர்பாடுவான் என்ற நடவடிக்கைக்கு ஏற்ப தொகுதியில் வசிப்போர் அனைவரும் சகோதரத்துவம் ஒற்றுமையைப் பலப்படுத்தி ஒருவருக்கொருவர் உதவிடும் மனித நேயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தமது உரையில் தெரிவித்தார்.
கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் சுல்கிப்ளி பள்ளி மாணவர்களுக்கு நோன்புப் பெருநாள் அன்பளிப்பாக பண உறைகள் எடுத்து வழங்கினார்.
Menteri Kesihatan, Datuk Seri Dr. Zulkifli Ahmad, menganjurkan rumah terbuka Aidilfitri di kawasan parlimen Kuala Selangor dengan kehadiran lebih 1,000 orang. Beliau menyeru rakyat memperkukuh perpaduan dan menyebar nilai kemanusiaan melalui semangat Madani.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *