சட்டம் தெரியாமல் உளறாதிர்! சட்டத்துறை அமைச்சர் Datuk Seri Azalina Othman ஆவேசம்!

- Sangeetha K Loganathan
- 21 Apr, 2025
ஏப்ரல் 21,
சட்டத்திருத்தம் பற்றிய புரிதல் இல்லாமல் வாய்க்கு வந்ததை உளறாதீர்கள் என சட்ட நிருவனச் சீர்த்திருத்த அமைச்சர் Datuk Seri Azalina Othman தெரிவித்தார். அரசாங்கம் தங்களுக்குச் சாதகமாகச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டிய நிலையில் Datuk Seri Azalina Othman இவ்வாறு தெரிவித்தார். இதுவரையில் காலாவதியானச் சட்டங்களின் மொத்த எண்ணிக்கை 3,000 என தெரிவித்த Datuk Seri Azalina Othman, அதில் 2,000 க்கும் மேற்பட்ட சட்டவிதிகளைத் திருத்தம் செய்வதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.
நாடாளுமன்ற வாக்கெடுப்புகளின் மூலமாக சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் சட்டத்தின் கூறுகளில் உள்ளவற்றைக் காலத்திற்கு ஏற்பவும் மக்களின் நடைமுறை வாழ்வியலுக்கு ஏற்பவும் அவ்வப்போது திருத்தம் செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து எந்தவொரு புரிதலும் இல்லாமல் வாய்க்கு வந்ததை உளறி பாமர மக்களையும் குழப்ப வேண்டாம் என Datuk Seri Azalina Othman வலியுறுத்தினார். சட்டத்திருத்தம் என்பது ஒரு நாள் இரவில் ஏற்படுவது அல்ல. அது முறையான மதிப்பாய்வின் மூலமாக மட்டுமே திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் இல்லையேல் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்பதையும் சட்ட நிருவனச் சீர்த்திருத்த அமைச்சர் Datuk Seri Azalina Othman விளக்கமளித்தார்.
Menteri Undang-undang, Datuk Seri Azalina Othman, menegur pihak pembangkang agar tidak mengeluarkan kenyataan mengelirukan mengenai pindaan undang-undang tanpa kefahaman yang jelas, sambil menjelaskan keperluan menilai dan meminda lebih 2,000 undang-undang lapuk.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *