ஷா அலாம் வெள்ளத்தில் மிதந்த ஆடவரின் சடலம்!

- Sangeetha K Loganathan
- 11 Apr, 2025
ஏப்ரல் 11,
ஷா அலாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம் கட்டம் கட்டமாகத் தனிந்து வரும் நிலையில் இன்று காலை Jalan Padu 25/127, Taman Alam Indah, Seksyen 25 பகுதியில் ஆடவரின் சடலமும் உயிரிழந்த நிலையில் ஒரு நாயும் மீட்கப்பட்டதாக ஷா அலாம் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார். இன்று காலை 10.51 மணிக்கு ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் அருகில் உள்ள கட்டுமானப் பணிக்காக மலேசியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஆடவர் என்றும் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார்.
உயிரிழந்த ஆடவர் 27 வயது இலங்கையைச் சேர்ந்த ஆடவர் என்றும் அவர், சம்மந்தப்பட்ட அடையாள ஆவணங்கள் அருகிலுள்ள கட்டுமானப் பகுதிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் மின்சாரம் தாக்கியதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனார். ஆடவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காகக் கிள்ளான் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் விசாரணையைத் தொடர்வதாக ஷா அலாம் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார்.
Shah Alam dilanda banjir dan satu mayat lelaki bersama seekor anjing ditemui di Jalan Padu 25/127. Mangsa dikenalpasti sebagai warga Sri Lanka berusia 27 tahun. Polis mengesyaki mangsa maut akibat renjatan elektrik dan siasatan diteruskan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *