SUNGAI BULOH வெள்ளம்! 80 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின!

top-news

ஏப்ரல் 23,

இன்று அதிகாலை பெய்த கனமழையின் காரணமாக சிலாங்கூரில் உள்ள SUNGAI BULOH குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதில் 80 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். நேற்று மாலை தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்திருந்த நிலையில் மீட்பு ஆணைய அதிகாரிகள் தயார் நிலையில் இருந்ததால் பெரும் சேதத்திலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற முடிந்ததாக Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் நீர் மட்டம் உயர்ந்து Kampung Paya Jaras குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தததாகவும் அதிகாலை 6.31 மணிக்குள் சம்மந்தப்பட்ட குடியிருப்புவாசிகள் அனைவரையும் மீட்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டு பாதுகாப்பானப் பகுதிக்குக் கொண்டு சென்றதால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். தற்போது வரையில் 6 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்திருப்பதாக சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

Hujan lebat awal pagi ini menyebabkan banjir di kawasan perumahan Sungai Buloh dan 80 rumah telah tenggelam. Semua penduduk berjaya diselamatkan tanpa sebarang korban jiwa, dan enam rumah dilaporkan rosak teruk, menurut Bomba Selangor.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *