Ayer Kuning இடைத்தேர்தலில் PSM கட்சியின் பவானி போட்டி!

- Sangeetha K Loganathan
- 08 Apr, 2025
ஏப்ரல் 8,
Ayer Kuning சட்டமன்ற இடைத்தேர்தலில் மலேசிய சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக வழக்கறிஞர் Bawani போட்டியிடுவதாக PSM கட்சியின் தலைவரும் சுங்கை சிப்புட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான Dr Michael Jeyakumar Devaraj இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மூடா கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் Leben Siddarth, PRM கட்சியின் தலைவர் Ahmad Jufliz Faiza ஆகியோர் பவானிக்கு ஆதரவாகக் கலந்து கொண்டனர்.
மூடா கட்சியின் ஆதரவும் PRM கட்சியின் ஆதரவும் இருப்பதால் Ayer Kuning சட்டமன்ற இடைத்தேர்தலில் மலேசிய சோசலிஸ்ட் கட்சிக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் Dr Michael Jeyakumar Devaraj நம்பிக்கை தெரிவித்தார். PSM கட்சியின் துணைச் செயலாளராகவும் வழக்கறிஞராகவும் இருக்கும் பவானி கடந்த சட்டமன்றத் தேர்தலில் 213 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dalam pilihan raya kecil Ayer Kuning, Bawani dari Parti Sosialis Malaysia (PSM) bertanding sebagai calon, diumumkan oleh Presiden PSM, Dr Michael Jeyakumar Devaraj. Sokongan daripada parti Muda dan PRM meningkatkan peluang kemenangan PSM.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *