தனியார் பள்ளி மாணவர்களின் சீருடையிலும் தேசிய கொடி இருத்தல் அவசியம்! – கல்வி அமைச்சர்

- Sangeetha K Loganathan
- 21 Apr, 2025
ஏப்ரல் 21,
இன்று முதல் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிந் பள்ளிச் சீருடையில் கட்டாயம் தேசியக் கொடி இருக்க வேண்டும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek நினைவுருத்தினார். பள்ளியில் உள்ள மாணவர்களின் சீருடையில் கட்டாயம் தேசிய கொடி இருக்க வேண்டும் என்பதால் இன்று காலை மலேசியாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சீருடையில் அணியும்படியானத் தேசியக் கொடியை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் Fadhlina Sidek தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் மட்டுமில்லாது அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் சீருடையில் தேசிய கொடி இருக்க வேண்டுமென Fadhlina Sidek தெரிவித்தார். தனியார் பள்ளியாக இருந்தாலும் கல்வி அமைச்சின் இந்த வலியுறுத்தலைப் பின்பற்றும்படி Fadhlina Sidek தெரிவித்தார். கல்வி அமைச்சின் சிறப்புப் பணிக்குழு அதிகாரிகள் பள்ளிக் கூடங்களைக் கண்காணித்து வருவதாகவும் கல்வி அமைச்சின் வலியுறுத்தலை மீறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளாக இருந்தாலும் அரசு பள்ளிகளாக இருந்தாலும் பள்ளி நிர்வாகத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என Fadhlina Sidek எச்சரிக்கை விடுத்தார். இன்று காலை மலேசியா முழுக்க 53 லட்ச மாணவர்கள் பள்ளி சீருடையில் தேசியக் கொடியை அணிந்துள்ளதாக Fadhlina Sidek தெரிவித்தார்.
Menteri Pendidikan Fadhlina Sidek menegaskan bahawa semua pelajar, termasuk di sekolah swasta, wajib memakai pakaian seragam dengan bendera kebangsaan. Beliau turut mengingatkan bahawa tindakan akan diambil terhadap sekolah yang tidak mematuhi arahan tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *