மோட்டார் சைக்கிள் பட்டறையில் தீ! மூவர் படுகாயம்!

top-news

ஏப்ரல் 16,

நேற்று இரவு குவாந்தானில் உள்ள Alor Akar குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மோட்டார் சைக்கிள்களைப் பழுதுபார்க்கும் கடை முழுவதும் தீயில் கருகி நாசமானதுடன் மூவர் தீக்காயத்திற்குள்ளானதாகப் பகாங் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Mohd Salahuddin Isa தெரிவித்தார். தீக்காயத்திற்குள்ளான மூவரையும் மீட்புப் படையினர் மீட்டதாகவும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Mohd Salahuddin Isa தெரிவித்தார்.


நேற்றிரவு 9.24 மணிக்குத் தீ விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் 28 பேர் கொண்ட தீயணைப்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தீ ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் பட்டறை பலகையினாலானது என்பதால் தீ விரைவாகப் பரவியதில் பட்டறை முழுமையாகத் தீயில் கருகியதாகவும் 2 வாகனங்கள் 10 மோட்டார் சைக்கிள்களும் தீயில் முழுமையாகக் கருகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பு ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பகாங் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Mohd Salahuddin Isa தெரிவித்தார்.

Sebuah bengkel motosikal di Alor Akar, Kuantan musnah dalam kebakaran malam tadi, menyebabkan tiga orang cedera. Api merebak pantas kerana struktur kayu bengkel. Dua kenderaan dan sepuluh motosikal turut musnah dalam kejadian itu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *