கடனை வசூலிக்க வீட்டில் கையெறி குண்டுகளை வீசிய ஆடவர்!

- Sangeetha K Loganathan
- 09 Apr, 2025
ஏப்ரல் 9,
தனியார் கடன் நிறுவனத்தில் கடன்பெற்று கடனைத் திருப்பி செலுத்தாத 62 வயது மூதாட்டியின் வீட்டில் கையெறி PETROL குண்டுகளை வீசிய ஆடவரைக் காவல்துறையினர் தேடி வருவதாக ஈப்போ மாவட்டக் காவல் ஆணையர் Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார். கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரையில் சம்மந்தப்பட்ட கடன் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தம்மை மிரட்டி வருவதாகப் பாதிக்கப்பட்ட 62 வயது மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார்.
ஈப்போவின் Kampung Rapat குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 5 கையெறி குண்டுகள் வீசப்பட்டதில் வீடு மிகுந்த சேதம் அடைந்துள்ளதாக Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார். ஆடவர் ஒருவர் சாலையில் நின்றபடி வீட்டுக்குள் கையெறி PETROL குண்டுகளை வீசும்படியானக் காணொலி சமூக வலைத்தலங்களைப் பரவியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான 62 வயது மூதாட்டி கையெறி குண்டுகளை வீசிய ஆடவரை அடையாளம் கண்டுள்ளதாகவும் Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார்.
Seorang lelaki disyaki membaling bom petrol ke rumah seorang wanita warga emas berusia 62 tahun di Ipoh kerana gagal melunaskan pinjaman daripada syarikat pinjaman wang. Polis sedang mengesan suspek berdasarkan rakaman video yang tular di media sosial.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *