தீ விபத்தில் உயிர் பிழைத்த 7 பேர்!

- Sangeetha K Loganathan
- 12 Apr, 2025
ஏப்ரல் 12,
இன்று அதிகாலை Bandar Putra குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு 7 பேரை மீட்டனர். அதிகாலை 5 மணிக்குத் தீ விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் ஜொகூர் மாநிலத் தீயணைப்பு ஆணையத்தின் 12 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஜொகூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Abdul Malik Rahman தெரிவித்தார்.
வீட்டில் சிக்கியிருந்த 44 வயது ஆடவர், 14 வயது சிறுவன், 38 வயது பெண், 18 வயது 16 வயது 10 வயது 7 வயது சிறுவர்கள் என 7 பேரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டதாக ஜொகூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Abdul Malik Rahman தெரிவித்தார். தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் காலை 6 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் ஜொகூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Abdul Malik Rahman தெரிவித்தார்.
Tujuh sekeluarga terselamat selepas terperangkap dalam kebakaran rumah di Bandar Putra, Kulai, awal pagi tadi. Kebakaran bermula di dapur dan berjaya dikawal sepenuhnya dalam sejam. Tiada kecederaan dilaporkan dan siasatan masih dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *