அடிமையாக வைக்கப்பட்ட வெளிநாட்டு ஆடவர்! இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 18 Apr, 2025
ஏப்ரல் 18,
கட்டுமானப் பணிக்காக மலேசியாவுக்கு வரவழைக்கப்பட்ட Bangladesh ஆடவரைக் கட்டாயப்படுத்தி அடிமையாக வைத்திருந்த 2 Bangladesh ஆடவர்களைகயும் உடன் இருந்த 85 Bangladesh நாட்டினர்களையும் குடிநுழைவுத் துறையினர் கைது செய்தனர். சிரம்பானில் உள்ள ஒரு கட்டுமானப் பணியில் Bangladesh ஆடவர் ஒருவர் கொடுமைப்படுத்தப்படுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்று காலை 10.40 மணிக்குச் சம்மந்தப்பட்ட கட்டுமானப் பகுதியில் நெகிரி செம்பிலான் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது கட்டாயத்தின் அடிப்படையில் தம்மை கொடுமைப்படுத்துவதாகவும் Bangladesh நாட்டிலிருந்து சுற்றுப்பயணத்திற்காக வந்த தம்மைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாகவும் பாதிக்கப்பட்ட Bangladesh ஆடவர் வாக்குமூலம் அளித்த நிலையில் பரிதாபமான நிலையில் பாதிக்கப்பட்ட Bangladesh ஆடவர் குடிநுழைவுத் துறையினரால் மீட்கப்பட்டதாகவும் கொடுமைப்படுத்தியதாக நம்பப்படும் 2 Bangladesh நாட்டு ஆடவர்களையும் சம்மந்தப்பட்ட கட்டுமானப் பகுதியில் இருந்த 85 வெளிநாட்டினர்களையும் விசாரணைக்காகக் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang lelaki warga Bangladesh yang dijadikan buruh paksa di sebuah tapak pembinaan di Seremban telah diselamatkan oleh Jabatan Imigresen. Dua warga Bangladesh ditahan kerana memaksa mangsa bekerja, bersama 85 warga asing lain untuk siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *