துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சட்டமன்ற உறுப்பினர்! காவல்துறை விசாரணை!

- Sangeetha K Loganathan
- 14 Apr, 2025
ஏப்ரல் 14,
PKR தேர்தலின் போது வாக்காளர்களிடம் கைத்துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டல் விடுத்ததாகப் பரவிய காணொலியின் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகப் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் DATUK NOOR HISAM NORDIN தெரிவித்தார். தம்பூன் தொகுதி PKR கட்சித் தேர்தல் TAMAN INDAH பொதுமண்டபத்தில் நடந்த போது குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர் கைத்துப்பாக்கியைக் கொண்டு மிரட்டியது தொடர்பாக 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகப் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் DATUK NOOR HISAM NORDIN தெரிவித்தார்.
இது தொடர்பாக மிரட்டலுக்குள்ளான ஆடவர் சம்மந்தப்பட்ட இடத்திலிருந்து காணொலிப் பதிவை மேற்கொண்ட நிலையில் நண்பகல் 12.28 மணிக்கு ஈப்போ மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் DATUK NOOR HISAM NORDIN தெரிவித்தார். இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில் மேலும் சம்பவ இடத்தில் நேரில் இருந்தவர்கள் வாக்குமூலம் அளிக்க காவல் நிலையத்திற்கு வரும்படியும் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் DATUK NOOR HISAM NORDIN கேட்டுக்கொண்டார்.
Polis telah merakam keterangan lapan saksi berhubung dakwaan calon PKR Cabang Tambun menunjukkan objek menyerupai pistol semasa majlis hari raya. Siasatan diteruskan bagi mengenal pasti punca kejadian dan mengesan saksi-saksi lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *