Cryptocurrency மோசடியில் RM300,378 இழந்த முதியவர்!

- Sangeetha K Loganathan
- 10 Mar, 2025
மார்ச் 10,
அதிக லாபம் பெறும் ஆசையில் தகுதியற்ற அங்கீகரிக்கப்படாத Cryptocurrency முதலீட்டில் தனது சேமிப்புப் பணமான RM300,378 முதலீடு செய்த 63 வயது முதியவர் ஏமாற்றப்பட்டதாகக்க் குவாந்தான் மாவட்டக் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். சமூகவலைத்தலத்தின் மூலம் அதிக லாபம் பெறும் வகையிலான முதாலீட்டு விளம்பரத்தைக் கண்டு முதலீடு செய்ததாகப் பாதிக்கப்பட்ட 63 வயது முதியவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகப் பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 1 முதல் பிப்ரவரி 5 வரையில் 9 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 10 பரிவர்த்தனை செய்ததாகவும் முதல் வாரத்தில் RM20,698 லாபம் பெற்றாலும் முதலீடு செய்த பணத்தை மீண்டும் பெற முடியாததால் பாதிக்கப்பட்ட 63 வயது முதியவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சம்மந்தப்பட்ட முதலீட்டி நிறுவனத்தின் பரிவுகள் அதிகாரப்பூர்வமற்றவை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகப் பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்.
Seorang peniaga di Kuantan rugi RM300,378 selepas terpedaya dengan skim pelaburan kripto palsu. Mangsa hanya menerima satu pulangan kecil sebelum menyedari dia tidak dapat mengeluarkan wang pelaburan. Polis mengingatkan orang ramai agar membuat semakan sebelum menyertai pelaburan atas talian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *