டி.ஏ.பி கட்சித் தேர்தலில் வாக்காளருக்குப் பணம் கொடுக்கபடுகிறது! – சதீஷ் முனியாண்டி குற்றச்சாட்டு!

top-news

மார்ச் 11,

டி.ஏ.பி கட்சியின் தேசிய உறுப்பினர்களுக்கானத் தேர்தல் இவ்வாரம் நடைபெறவிருக்கும் நிலையில் குறிப்பிட்ட அரசியல் தலைவர்கள் டி.ஏ.பி கட்சியின் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைச் சேகரிப்பதாக Bagan Dalam முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் Satees Muniandy இன்று குற்றம் சாட்டினார். இது ஒரு கேவலமான அரசியல் என்றும் தாம் 16 ஆண்டுகள் டி.ஏ.பி கட்சியில் பொறுப்பில் இருந்த காலத்தில் இதுபோன்று வாக்குக்குப் பணம் கொடுக்கும் நிலை இருந்ததில்லை என்றும் Satees Muniandy தெரிவித்துள்ளது.

வாக்குக்குப் பணம் கொடுக்கும் சம்மந்தப்பட்ட டி.ஏ.பி தலைவர்களில் சிலர் பினாங்கைச் சேர்ந்த முக்கிய நாடாளுமன்றச் சட்டமன்ற உறுப்பினர்கள் என்றும், வாக்காளர்களுக்குத் தலா RM1,000 வரையில் போக்குவரத்து செலவு எனும் அடிப்படையில் வழங்கப்படுவதாகவும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலையிட்டு டி.ஏ.பி கட்சித் தேர்தலில் லஞ்சம் கொடுக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தும்படியும் Satees Muniandy வலியுறுத்தினார். தற்போது தாம் டி.ஏ.பி கட்சியிலிருந்து விலகினாலும் இது குறித்து மிகுந்த கவலைப்படுவதாகவும் இது ஊழலுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருக்கும் தொண்டர்களுக்குக் கட்சியின் மீதும் சமூகத்தின் மீதும் சலிப்பை ஏற்படுத்திவிடும் என்றும் Satees Muniandy தெரிவித்தார்.

Bekas ADUN Bagan Dalam, Satees Muniandy, mendakwa terdapat unsur rasuah dalam pemilihan DAP apabila pemimpin tertentu memberi wang kepada pengundi sebagai elaun pengangkutan. Beliau menggesa SPRM menyiasat dakwaan ini bagi memastikan integriti proses pemilihan parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *