ஆடவரைத் தாக்கிய இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 12 Apr, 2025
ஏப்ரல் 12,
குளுவாங்கில் உள்ள எரிவாயு நிலையத்தில் ஆடவர் ஒருவரைச் சரமாரியாக இருவர் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட இருவரையும் காவல் துறையினர் கைது செய்ததாக Kluang மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார். 29 வயது 45 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் நேற்று மாலை 4 மணிக்குக் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பல்வேறு குற்றச் சம்பவங்களுக்காக முன்னமே தேடப்பட்டு வரும் குற்றவாளி என தெரிய வந்திருப்பதாக Kluang மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார். இது தொடர்பானக் காணொலியைச் சமூகவலைத்தலத்தலங்களில் பரப்ப வேண்டாம் என்றும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் Kluang மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.
Dua lelaki tempatan ditahan kerana mencederakan seorang individu di stesen minyak Jalan Mengkibol, Kluang. Kedua-duanya ditahan selepas video kejadian tular. Siasatan mendapati mereka rakan sekerja dan negatif dadah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *