வாகனமும் லாரியும் விபத்து! இருவர் படுகாயம்!

top-news

ஏப்ரல் 19,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11.17 மணிக்கு விபத்துக் குறித்து அவசர அழைப்பைப் பெற்றதாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் SABARODZI NOR AHMAD தெரிவித்தார். 

54 வயது HONDA CITY வாகனமோட்டி சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் 3 டன் லாரியிலிருந்த 51 வயது ஓட்டுநரும் 39 வயது உதவியாளரும் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் SABARODZI NOR AHMAD தெரிவித்தார். 


Dua lelaki tersepit dalam lori selepas melanggar belakang Honda City di KM 258.3 Lebuhraya PLUS arah utara. Pasukan bomba berjaya mengeluarkan mangsa dan dihantar ke hospital. Pemandu kereta tidak cedera. Siasatan lanjut masih dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *