இல்லாத ஆன்லைன் முதலீட்டு மோசடியில் 12 லட்சம் வெள்ளி இழந்த சுகாதாரப் பணியாளர்!

top-news
FREE WEBSITE AD

கப்பாளா பத்தாஸ், ஏப்ரல் 9:

இல்லாத ஆன்லைன் முதலீட்டு மோசடியில் சிக்கி, ஒரு சுகாதாரப் பணியாளர் 12 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு 58 வயதான சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவரிடம் இருந்து புகார் கிடைத்ததாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP அனுவார் அப்துல் ரஹ்மான் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் டிசம்பர் 20 அன்று காலை 10 மணிக்கு பேஸ்புக்கில் முதலீட்டுக்கான விளம்பரத்தைப் பார்த்ததாகவும், அதனால் ஈர்க்கப்பட்ட அவர், ஏழு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றியுள்ளார்.
மூலதனத்தில் 500 முதல் 800 விழுக்காடு வரை வருமானம்  கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் அவர் பண பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளதாக  அனுவார் அப்துல் ரஹ்மான் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இருப்பினும், பாதிக்கப்பட்டவருக்கு இன்றுவரை எந்த வருமானமும் கிடைக்கவில்லை என்றும், பின்னர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

Seorang penjawat kesihatan kerugian lebih RM1.2 juta akibat penipuan pelaburan dalam talian. Mangsa tertarik dengan iklan di Facebook dan memindahkan wang ke tujuh akaun bank. Namun, tiada pulangan diterima dan laporan polis dibuat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *