சித்ரா பெளர்ணமியில் மதுபான விற்பனை தடை- சிவநேசனுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஆதரவு!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

தெலுக் இந்தான். ஏப்.16-

கீழ்ப் பேரா மாவட்டத்தைச் சேர்ந்த தெலுக் இந்தானில் சுமார் 110 ஆண்டுகளாக நாடே அறியும் வண்ணம் மிகச் சிறப்பான முறையில், சித்ரா பெளர்ணமி திருவிழா நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு சித்ரா பெளர்ணமியின் போது ரத ஊர்வலம் வரும் அனைத்து சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளும் மூன்று நாள்களுக்கு மூடப்படும் என பேரா மாநில இந்திய சமூக நல விவகாரத்திற்கு தலைமை வகிக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் கூறியிருப்பது பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் என்.வி.சுப்பாராவ் கூறியுள்ளார்.

பி.ப.சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப்பிரிவு அதிகாரியுமான சுப்பாராவ் தொடர்ந்து கூறுகையில், இந்த நல்ல முடிவு குறித்து பி.ப. சங்கம் தனது முழு ஆதரவையும் பாராட்டையும் தெரிவிக்க விரும்புகின்றது என்றார். சமூகத்தின் மீது கொண்டுள்ள மிகவும் ஆரோக்கியமான இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ள துணிச்சல் மிக்க சிவநேசன் பேராவுக்கு கிடைக்கப்பெற்ற சிறந்த அரசியல்வாதி என்றும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும், சமயம் சார்ந்த விழாக்களில் மதுபானங்கள் குறிப்பாக மலிவான சாராயங்களை அருந்தி ஒழுக்கமின்றியும், வரம்பு கடந்தும் நடைபெறும் வெறுப்புக்குரிய சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.சமய விழாக்களில் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பேணி காக்க வேண்டும் என்ற அக்கறையுடன் இந்த திட்டத்தை மாநில அரசு சார்பில் கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில் ரதம் செல்லும் சாலைகளில் அமைந்துள்ள மதுபானக் கடைகள் மூடப்படுவது மிகச் சிறந்த நன்னெறி முடிவாகும்.

Perayaan Chitra Pournami di Teluk Intan disambut selama 110 tahun. Sempena sambutan itu, semua kedai arak di laluan perarakan akan ditutup selama tiga hari. Keputusan ini disambut baik oleh masyarakat dan dianggap langkah bermoral demi keharmonian budaya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *