பினாங்கு புக்கிட் ஜம்புல் பகுதி குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும்!

- Muthu Kumar
- 10 Apr, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, ஏப். 10-
பினாங்கு மாநிலத்தின் தென்மேற்கு மாவட்டத்திலுள்ள புக்கிட் ஜம்புல் குடியிருப்புப் பகுதியில் நிலவும் பல்வேறான குறைபாடுகளுக்கு நிவர்த்தி காணும் கள ஆய்வுப் பணியில், மாநகர் மன்றத் தலைவர் டத்தோ அ.ராஜேந்திரன் தமது துறை சார்ந்த சகாக்களுடன் மேற்கொண்டு, விரைவில் இங்கு ஆக்ககரமான நடவடிக்கைகளுக்கு வழி வழி வகுத்தார்.
புக்கிட் ஜம்புல் பகுதியில் நிலவுகின்ற சுகாதார சீர்கேடுகள், நீரோட்டமற்ற சாக்கடைகள், வாகனம் நிறுத்துமிடப் பற்றாக் குறைகள், இங்குள்ள நிலத்தோற்றங்கள், குறுகலான பாதைகள் போன்ற பல்வேறான பிரச்சினைகள் தொடர்பில் எழுந்திருக்கும் புகார்கள் தொடர்பில், இங்கு இந்த கள ஆய்வுப் பணிகள்நடத்தப்பட்டன.
மாநகர் மன்றத் தலைவர் ராஜேந்திரனுடன் மன்ற உறுப்பினர் ஷாபீஸ் ரஹிம் ராஜா, நகரப் பெருஞ்சேவைத் துறை இயக்குநர் ரஷிடா ஜலாலுதீன், மன்ற அமலாக்கப் பிரிவு இயக்குநர் நோரஸிரீன் நோரஸலான், பொறியியல் துறையின் துணை இயக்குநர் ஜய்னுடின் முகமட் ஷரீப் ஆகியோரும் இந்தக் கள ஆய்வுப் பணியில் பங்கேற்று தத்தம் நடவடிக்கைகளை செயல்படுத்தினர்.
பொறுப்பு புளுக்கேற்ற நடவடிக்கை நிபோங் சமூக மேம்பாட்டுத் துறைத் தலைவர் பொறுப்புகளுக்கேற்ற தியோ எங் ஹின், பத்து உபான் சமூகநலத் துறை பொறுப்புதாரர் ஷான் ஆகிய இருவரும் வருகையளித்து இப்பகுதியில் நிலவும் குறைபாடுகளுக்கான நிவர்த்திகளுக்கு தக்க நடவடிக்கைகளுக்கான பங்களிப்புக்குத் துணை நின்றனர்.
Datuk A. Rajendran bersama pegawai-pegawai MBPP menjalankan lawatan ke Bukit Jambul bagi menilai masalah seperti sistem perparitan, laluan sempit dan isu parkir. Tindakan segera dirancang untuk menyelesaikan aduan penduduk secara berkesan dan menyeluruh.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *