பேரா மாநில சட்டமன்றம் ரஸ்மானை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்தது!

- Muthu Kumar
- 17 Apr, 2025
ஈப்போ, ஏப்.17-
பேரா மாநில சட்டமன்றம் எதிர்க்கட்சித் தலைவரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, செமாங்கோல் சட்டமன்ற உறுப்பினர் ரஸ்மான் ஜகாரியா உடனடியாக ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தை பேரா மாநில சட்டமன்றக் கூட்டத்தில் பெர்ச்சாம் சட்டமன்ற உறுப்பினர் ஓங் பூன் பியோ தாக்கல் செய்தார்.இதனை ரங்குப் தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர் ஷாருல் ஜமான் யஹ்யா ஆதரித்தார்.
கடந்தாண்டு டிசம்பர் 4ஆம் தேதியன்று சட்டமன்ற உரிமைகள், சுதந்திரக் குழுவிற்கு
பரிந்துரைக்கப்பட்ட பின்னர் ரஸ்மான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.குழுவின் அறிக்கையை சான்றளிக்கும் தீர்மானத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
Di Ipoh, selepas keputusan Dewan Undangan Negeri Perak untuk menggantung Ketua Pembangkang, Ahli Dewan Undangan Negeri (ADUN) Semanggol, Rasman Zakaria digantung selama enam bulan. Keputusan itu dibuat selepas sokongan majoriti ahli dewan, termasuk ADUN Percham, Ong Boon Pio.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *