எம்பிஐ ஊழியரின் முகத்தில் குத்திய உணவக ஊழியர்!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, ஏப். 18-

அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்ட ஈப்போ மாநகராண்மைக் கழக எம்பிஜி ஊழியர்களில் ஒருவர், உணவக ஊழியர் ஒருவரால் முகத்தில் குத்தப்பட்டார்.பேராக்கின் மெங்கௌம்புவில் உள்ள ஓர் உணவகத்தில், எம்பிஐ ஊழியர் ஒருவர் பொருட்களை பறிமுதல் செய்ய முயன்றபோது அங்கிருந்த உணவக ஊழியர் ஒருவர் அவரின் முகத்தில் குத்திய பிறகு அங்கு சிறு கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட 40 வயதுடைய எம்பிஐ ஊழியர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை 6.43 மணியளவில் போலீசில் புகார் செய்ததாக, ஈப்போ போலீஸ் தலைவர் அபாங் ஸைனால் அபிடின் தெரிவித்தார்.

எம்பிஐ சுகாதார இலாகாவின் புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்தில் உள்ள நாற்காலிகளையும் மேஜைகளையும் பறிமுதல் செய்ய எம்பிஐ ஊழியர்கள் முயன்றபோது, அவ்வுணவக ஊழியர் ஒருவர் அதிருப்தி அடைந்த பின்னர் நிலைமை சற்று மோசமானதாக அவர் தெரிவித்தார்.

"தங்களின் பணியை செய்ய விடாமல் எம்பிஐ ஊழியர்களைத் தடுக்க முயன்றதோடு, அவர்களை நோக்கி அந்த சந்தேகப்பேர்வழி கடுமையான வார்த்தைகளால் திட்டினான்.
அச்சம்பவத்தில் அந்த சந்தேகப்பேர்வழி, எம்பிஐ ஊழியர் ஒருவரின் முகத்தில் குத்தியதாக புகார் அளித்தவர் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று அபாங் ஸைனால் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் போலீசார் பல சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.தாமான் ராசி ஜெயாவில் உள்ள அந்த உணவகத்தில் நடந்த அச்சம்பவம் தொடர்பிலான ஒரு காணொளி சமூக வலைத் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.

Seorang pekerja Majlis Bandaraya Ipoh ditumbuk di muka oleh pekerja restoran semasa operasi rampasan barang di Menglembu. Polis sedang menyiasat insiden itu yang berlaku selepas pekerja restoran bertindak agresif dan menimbulkan kekecohan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *