வெற்றி பெற்ற சமுதாயமாகத் திகழ்வோம் - ஓம்ஸ் பா.தியாகராஜன்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 14-

சித்திரைப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் புதிதாக பிறந்துள்ள விசுவாவசு வருடப் பிறப்பு அனைவருக்கும் நலம் தரும் ஆண்டாக விளங்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும். இந்திய சமுதாயம் அனைத்து துறைகளிலும் வெற்றி நடைபோட இந்த இனிய புத்தாண்டில் உறுதி கொள்வோம் என்று ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா. தியாகராஜன் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்திய சமுதாயம் எதிர்காலத்தில் வெற்றி பெற்ற சமுதாயமாக திகழ வேண்டும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு துறையிலும் நமக்கானது என்கிற சிந்தனையை நாம் பெற வேண்டும்.பிந்திய நிலையில் இருக்கும் இந்திய சமுதாயம் முந்திய சமுதாயமாக உருமாற்றம் காண வேண்டும். அரசியல், கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம், சமயம் உள்ளிட்ட துறைகளில் நாம் என்றும் பின்தங்கிவிடக்கூடாது.

இளம் தலைமுறையினர் கல்வித் துறைகளில் சிறந்து விளங்க அதிக அக்கறை எடுத்துக்கொண்டு தங்களை வளப்படுத்திக் கொள்வது அவசியமாகும். எதிர்கால சமுதாயத்தின் வெற்றி அவர்களிடம் உள்ளது என்பதை நினைவில் கொள்வதும் முக்கியமாகும்.

பிறந்துள்ள சித்திரைப் புத்தாண்டு இந்திய சமுதாயத்திற்கு நன்மையைக் கொண்டுவரும் ஆண்டாக இருக்கும் என்று நம்புகின்றேன். அனைவருக்கும் மீண்டும் என் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓம்ஸ் தியாகராஜன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

OMS P. Thiagarajan mengucapkan Selamat Tahun Baru Chithirai dan berharap masyarakat India terus maju dalam semua bidang. Beliau menekankan kepentingan pendidikan generasi muda serta menyeru masyarakat agar berazam untuk mencapai kejayaan dan kemajuan pada masa depan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *