சட்டவிரோத பன்றிப் பண்ணைகளை கட்டாயம் மூடுவோம்- பெரிக்காத்தான் வாக்குறுதி!

- Muthu Kumar
- 23 Apr, 2025
ஆயர் கூனிங், ஏப். 23-
வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கும் பேராக்கின் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்றால், லைசென்ஸ் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய சட்டவிரோத பன்றிப் பண்ணைகள் அனைத்தும் மூடப்படும் என்று. அத்தொகுதியில் பெரிக்காத்தான் வேட்பாளராக போட்டியிடும் பாஸ் கட்சி வேட்பாளர் அப்துல் முஹைமி மாலே வாக்குறுதி அளித்துள்ளார்.
பேராக்கில் தேசிய முன்னணி-பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஆட்சி நடந்து வரும் வேளையில், சுற்றுச்சூழல் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் செயல்படும் சட்டவிரோத பன்றிப் பண்ணைகள் விவகாரம் தீர்க்கப்படும் என்று முஹைமின் கூறியுள்ளார்.
"சட்டவிரோத பன்றிப் பண்ணைகள் மற்றும் ஆக்கப்பூர்வமற்ற கழிவு நிர்வாக முறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது உட்பட, சுகாதாரத்தைப் பாதிக்கக் கூடிய தூய்மைக்கேட்டு பிரச்சினைக்கு நான் தீர்வு காண்பேன் என்று முஹைமின் தெரிவித்துள்ளார்.
இடைத் தேர்தல் பிரச்சாரங்களில் எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாஸ் கட்சியினர். மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் உள்ள பன்றிப் பண்ணைகள் விவகாரத்தை கையிலெடுத்துள்ளனர். கள கண்காணிப்பு அடிப்படையில், பத்தாங் பாடாங் மற்றும் முவாலிம் ஆகிய மாவட்டங்களில் 30 பன்றிப் பண்ணைகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக, பாஸ் கட்சி உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மாட் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
மலாய்க்காரர்கள் பெரும்பான்மையில் வசிக்கும் பகுதிகளில் சட்டப்பூர்வமான மற்றும் சட்டவிரோதமான பன்றிப் பண்ணைகள் அதிகளவில் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.எனினும், மலாய்க்காரர்கள் பெரும்பான்மையில் வாழும் பகுதிகளில் புதிய பன்றிப் பண்ணைகள் செயல்பட அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை கூறியிருந்தார்.
தற்போது இருக்கும் பன்றிப் பண்ணைகள் தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் நீண்ட காலமாக இருந்து வருவதாகவும் நவீன தோட்டத்துறை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்னரே அவை அங்கு அமைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.இந்த இடைத் தேர்தலில் முஹைமியைத் தவிர்த்து தேசிய முன்னணி சார்பில் யுஸ்ரி பக்ரியும் மலேசிய சோஷலிச கட்சி சார்பில் கேஎஸ் பவானியும் போட்டியிடுகின்றனர். இதன் வாக்களிப்பு வரும் சனிக்கிழமை 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Ayer Kuning PRK: Calon PAS, Abdul Muhaimi janji tutup ladang babi haram jika menang. Isu alam sekitar, kesihatan dan ladang babi jadi fokus kempen. Tiga calon bertanding, pengundian berlangsung 26 April ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *