ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் BN வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவோம்!

- Muthu Kumar
- 22 Apr, 2025
(தி.ஆர்.மேத்தியூஸ்)
தாப்பா, ஏப். 22-
பேரா மாநிலத்தின் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், தேசிய முன்னணி வேட்பாளரை ஆதரித்து மடானி அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தங்களின் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கும் வேளையில், தேசிய முன்னணியின் ஆதரவு கட்சியான ஐபிஎப்பும் தனது அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டி.லோகநாதன் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள தேசிய முன்னணி வேட்பாளராக டாக்டர் முகமட் யுஸ்ரி பாக்கிர் போட்டியிடுகிறார். அரசியலில் சிறந்த அனுபவம் பெற்றவரும், சிறந்த சேவையாளருமான அவரின் வெற்றி மட்டுமே தொகுதி நலன்களையும், எதிர்காலத்தையும் உறுதி செய்யும் என்ற நம்பிக்கையில், வெற்றியை உறுதி செய்ய,கட்சி தீவிர பிரச்சாரத்தில் இறங்கி செயல்பட்டு வருவதாக கூறினார்.
இந்த தொகுதியில் உள்ள பதிவு பெற்ற இந்திய வாக்காளர்களை வீடுகள்,வியாபாரக் கடைகள், சந்தைகள், நகர்ப்புறங்கள். கம்பங்கள் ஆகிய இடங்களில் சந்தித்து வாக்குகளை சேகரித்து வருவதோடு, தொகுதியில் அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து வருகிறோம் என்றார்.
வேட்புமனு தாக்கல் முடிந்து ஒரு வாரத்திற்கு மேல் கடந்து விட்ட நிலையில்,பேரா மாநிலத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களிலிருந்தும் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் இங்கு கூடி பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இங்கு தாப்பா தொகுதி ஏற்பாட்டில், பீடோர் தாமான் பெர்மாத்தா வளாகத்தில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு உரையாற்றினார். மேலும் பேசிய அவர், இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளரின் வெற்றி மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டுமென கட்சி உறுப்பினர்களுக்கு நினைவுறுத்தினார்.
தேர்தல் நாள் வரையில், ஒற்றுமை அரசாங்கத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் தமது தலைமையிலான ஐபிஎப் கட்சி ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கட்சியின் தேசியத் தலைவருடன், தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் முகமட் யுஸ்ரி பாக்கிர், பேரா மாநில தேசிய முன்னணி செயலாளர் டத்தோ அமின், பேரா மாநில ஐபிஎப் தலைவர் வ.மாணிக்கம், கெடா மாநிலத் தலைவர் டத்தோ வேலாயுதம்,பினாங்கு மாநிலத் தலைவர் எஸ்.குமரேசன், மேலும் பல கட்சியின் பொறுப்பாளர்களும் தொகுதி வாக்காளர்களும் கலந்து கொண்டனர்.
IPF giat berkempen menyokong calon BN Dr. Mohamad Yusri di Ayer Kuning, menjelang pilihan raya kecil. Presiden IPF, Dato' D. Loganathan menegaskan kemenangan calon BN penting untuk masa depan kawasan. Kempen turut melibatkan kunjungan rumah dan pertemuan dengan pengundi India tempatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *