பி.கே.ஆர் தேர்தலில் நான் போட்டியிடவில்லை! துணை அமைச்சர் விளக்கம்!

top-news

ஏப்ரல் 16,

பி.கே.ஆர் கட்சியின் பொதுச் செயலாளராகவும் துணை அமைச்சராகவும் இருக்கும் Dr Fuziah Salleh கட்சி தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என்பதற்கானக் காரணத்தைத் தெரிவித்துள்ளார். கடந்த 2918 ஆம் ஆண்டு முதல் கிளைத் தலைவர் பொறுப்பைத் துறந்து,அன்வாரின் ஆலோசனையை ஏற்று கட்சியை வலுப்படுத்த அனைத்து கிளைத்தலைவர்களுடனும் இணக்கமான உறவை மேம்படுத்துவதாகவும் Dr Fuziah Salleh தெரிவித்தார்.

மலேசியா முழுவதுமுள்ள பி.கே.ஆர் கட்சியின் கிளைத் தலைவர்களுக்கானப் போட்டி நடைபெற்று வரும்நிலையில் சில இடங்களில் மாற்றுக் கருத்துகளைக் கொண்டவர்கள் உள்ள நிலையில் அனைத்தும் சுமூகமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எதிர்த்து போட்டியிடுபவர்களை எதிரியாகப் பார்க்கும் நிலையிலிருந்து ஆரோக்கியமானத் தேர்தலை நடத்த ஒத்துழைப்பு அளிக்கும்படி கட்சி உறுப்பினர்களைப் பொதுச் செயலாளர் Dr Fuziah Salleh கேட்டுக் கொண்டார்.

Timbalan Menteri dan Setiausaha Agung PKR, Dr Fuziah Salleh menjelaskan beliau tidak bertanding dalam pemilihan parti kali ini kerana mahu memfokus kepada memperkukuh hubungan dengan ketua-ketua cabang atas nasihat Presiden parti, Anwar Ibrahim.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *