வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெ.1,000 கொடுக்க முடியாவிட்டால் வெ.500 ஆவது கொடுங்கள்!

- Muthu Kumar
- 08 Apr, 2025
கோலாலம்பூர், ஏட் 8-
சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும், பேரிடர் நிதியிலிருந்து 1,000 வெள்ளி உதவி நிதியை பெறுவது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு, தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனமான நட்மா வலியுறுத்தப்பட்டு உள்ளது.அரசாங்க நிவாரண மையத்தில் தங்குவதற்கு இணக்கம் தெரிவித்தவர்களுக்கு மட்டுமே அந்நிதி உதவி வழங்கப்பட்டிருப்பதாக, பொதுப்பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
வெள்ளத்தின்போது தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறாதவர்கள் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பதற்கான காரணங்களை கொண்டிருப்பதாக, தமது தொகுதி மக்களை தற்காத்து, முகநூல் பதிவு ஒன்றில் நந்தா பதிவொன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.
“அவர்கள் தங்களின் வீடுகளிலிருந்து வெறியேற மறுக்கவில்லை. ஆனால், தற்காலிகமாக அவர்களை வேறு இடத்தில் குடியேற்றம் செய்வதற்காக போக்குவரத்து வசதி இல்லாமல் போனது. தங்களின் உடைமைகள் களவாடப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் சிலர் வெளியேறவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது"என்று. சரவாக் மாநிலத்திலுள்ள கப்பிட் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான நந்தா தெரிவித்தார்.
இத்தகையோருக்கு ஆயிரம் வெள்ளி கொடுக்க முடியாவிட்டால், குறைந்தது அதில் பாதி அதாவது 500 வெள்ளியையாவது கொடுக்குமாறு நட்மாவிடம் நந்தா கேட்டுக் கொண்டார்.இவ்வாண்டு பிப்ரவரியில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தால் சரவாக்கைச் சேர்ந்த சுமார் 5,600 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றில் 3,600 குடும்பங்களுக்கு மட்டுமே 1,000 வெள்ளி உதவி நிதி வழங்கப்பட்டிருப்பதாக, மாநில துணை முதலமைச்சர் டக்லஸ் உங்கா எம்பாஸ் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.
Menteri meminta NADMA kaji semula bantuan banjir RM1,000 di Sarawak. Ramai mangsa tidak berpindah kerana tiada pengangkutan atau bimbang kecurian. Cadangan diberi agar mereka terima sekurang-kurangnya RM500. Hanya 3,600 daripada 5,600 keluarga terima bantuan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *