குழந்தையை வீசிய 18 வயது தாயிற்கு அபாரதமும் சிறையும்!

- Sangeetha K Loganathan
- 10 Apr, 2025
ஏப்ரல் 10,
பிறந்த குழந்தையை Petronas நிலையத்தின் கழிப்பறையில் வீசிய 18 வயது இளம்பெண்ணுக்கு RM 5,000 அபராதமும் 1 மாதம் சிறையும் விதித்து SUNGAI BESAR MAJISTRET நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கைது செய்யப்பட்ட 18 வயது இளம்பெண் தாம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் உருவானக் கரு என்பதாலும் குழந்தை இறந்து பிறந்ததால் கழிப்பறையில் வீசியதாகவும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் MAJISTRET நீதிபதி SITI HAJAR ALI இந்த தீர்ப்பை வழங்கினார்.
கடந்த 23 மார்ச் KAMPUNG SUNGAI HAJI DORANI PETRONAS நிலையத்தின் பெண்கள் கழிப்பறையில் இறந்த நிலையில் பிறந்த குழந்தையின் உடல் மீட்கப்பட்டதும் PETRONAS பகுதியில் உள்ள சந்தேகத்திற்குரிய BEZZA வாகனத்தைப் பின் தொடர்ந்து 18 வயது இளம்பெண்ணைக் காவல்துறை கைது செய்துள்ளது. சிறை தண்டனைக்குப் பின்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குற்றம் தொடர்பாகக் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.
Sungai Besar Majistret Mahkamah menjatuhkan hukuman denda RM5,000 dan penjara sebulan kepada remaja 18 tahun kerana membuang bayi mati ke dalam tandas Petronas. Kes berkait rogol turut diperintah disiasat lanjut oleh pihak polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *