பேருந்து நிலையத்தில் அடிதடி! காவல்துறை நடவடிக்கை!

top-news

ஏப்ரல் 11,

பேருந்து நிலையத்தில் இருவர் அடிதடியில் ஈடுபடும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதைத் தொடர்ந்து அடிதடியில் பாதிக்கப்பட்ட 21 வயது உள்ளூர் ஆடவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகத் தென் ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். காலை 7 மணிக்குச் சிங்கப்பூருக்குச் செல்லும் BSI பேருந்து நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் ஏறுவதற்காகக் காத்திருந்த வரிசையில் ஆடவர் ஒருவர் வரிசையை மீறி முன்னே சென்று பேருந்தில் ஏற முயன்றதாகவும் வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஆடவர் தட்டிக்கேட்டதும் இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவருக்குமிடையிலானக் கைகலப்பு தொடர்பாகக் காவல்துறையினர் மேலதிக விசாரணையை மேற்கொள்வர் என்றும் அடிதடியில் ஈடுபட்ட மற்றோர் ஆடவரைக் காவல்துறையினர் தேடி வருவதாகவும் தென் ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார்.

Seorang lelaki tempatan membuat laporan polis selepas terlibat dalam pergaduhan di Terminal Bas BSI, Johor Bahru. Kejadian berpunca apabila seorang individu memotong barisan. Polis sedang menyiasat dan memburu suspek yang terlibat dalam insiden tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *