GENTING சாலையில் ஆபத்தாக வாகனத்தை ஓட்டியவர்களைக் காவல்துறை விசாரிக்கும்!

top-news

மார்ச் 11,

கெந்திங் மலைக்குச் செல்லும் சாலையில் பிற வாகனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தைச் செலுத்தும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதைத் தொடர்பாகச் சம்மந்தப்பட்ட சொகுசு வாகனமோட்டிகள் மீது காவல்துறை விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாக Bentong மாவட்டக் காவல் ஆணையர் Zaiham Mohd Kahar தெரிவித்தார்.

மிகவும் ஆபத்தானச் சாலைகளில் பிற வாகனங்கள் பாதுகாப்பாகப் பயணிக்கும் போது சில சொகுசு வாகனங்கள் பிற வாகனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தைச் செலுத்தியிருப்பதாக அக்காணொலியின் வாயிலாகத் தாம் உணர்வதால் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக Bentong, மாவட்டக் காவல் ஆணையர் Zaiham Mohd Kahar தெரிவித்தார். 

சம்மந்தப்பட்ட சொகுசு வாகனங்களின் பதிவு எண்களின் அடிப்படையில் அதன் ஓட்டுநர்களை அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர்கள் மீது விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர் அல்லது பாதிகப்பட்ட ஓட்டுநர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் Bentong, மாவட்டக் காவல் ஆணையர் Zaiham Mohd Kahar கேட்டுக் கொண்டார்.

Polis menyiasat sekumpulan pemilik kereta mewah yang tular memandu secara berbahaya di Genting Highlands. Polis menggesa saksi tampil membantu siasatan dan merancang operasi bersepadu bagi menangani aktiviti yang mengganggu ketenteraman awam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *