பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! ஆசிரியர் கைது!

- Sangeetha K Loganathan
- 23 Apr, 2025
ஏப்ரல் 23,
பள்ளியில் 9 வயதுள்ள 3 மாணவிகளிடம் பாலியல் சீண்டல் புரிந்ததாக 47 வயது கணித ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஆசிரியரை 5 நாள்கள் விசாரணைக் காவலில் தடுத்து வைக்கும்படி Johor Bahru உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஜொகூர் Mutiara Rini பகுதியில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் 47 வயது ஆசிரியர் இந்த அநாகரிகச் செயலைப் புரிந்ததாகப் பாதிக்கப்பட்ட 3 மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக Iskandar Puteri, மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan தெரிவித்தார்.
நேற்று அவரின் வீட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று உயர்நீதிமன்றம் சம்மந்தப்பட்ட ஆடவரை நீதிமன்றக் காவலில் தடுத்து வைக்கும்படியும் மேலதிக விசாரணையை நடத்தும்படியும் உத்தரவிட்டுள்ளதாகவும் Iskandar Puteri, மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 47 வயது ஆசிரியர் மீதானக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறைதண்டனையும் சவுக்கடியும் விதிப்படலாம் என Iskandar Puteri, மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan தெரிவித்தார்.
Seorang guru berusia 47 tahun telah direman atas kesalahan melakukan amang seksual terhadap tiga murid perempuan berusia 9 tahun di sekolah yang terletak di Mutiara Rini. Suspek ditahan di rumahnya setelah menerima laporan daripada tiga mangsa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *