மாநில உரிமைகளைப் பறிக்காதீர்! அன்வாருக்குத் திரங்கானு முதல்வர் வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 18 Apr, 2025
ஏப்ரல் 18,
பெரிக்காத்தான் ஆட்சியமைத்திருக்கும் மாநிலங்களை ஒற்றுமை கூட்டணி அரசாங்கம் மறைமுகமாகத் தாக்குவதாகத் திரங்கானு மாநில METERI BESAR Dato' Seri Ahmad Samsuri Mokhtar குற்றம் சாட்டினார். மாநில அரசுகளின் உரிமைகளில் உள்ள முக்கிய அம்சங்களைப் பறிக்கும்படியானத் திட்டங்களையும் சட்டத்திருத்தங்களையும் தொடர்ந்து அன்வார் தலைமையிலான மடானி அரசு முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டு பெரிக்காத்தான் ஆளும் மாநிலங்களான PERLIS, KEDAH, KELANTAN, TERENGGANU ஆகிய மாநிலங்களின் முக்கிய உரிமைகள் மறைமுகமாகப் பறிக்கப்படுவதாகவும் Dato' Seri Ahmad Samsuri Mokhtar தெரிவித்தார்.
மாநிலத்தின் கனிம வளங்கள் மாநில அரசுக்கான உரிமைகளில் ஒன்றாக இருந்தாலும் திரங்கானு கடல்பரப்பிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய்க்கான ராயல்டி விழுக்காடுகளை மடானி அரசு உயர்த்தியிருப்பதாகவும் Dato' Seri Ahmad Samsuri Mokhtar குறிப்பிட்டார். திராங்கானுவிற்குக் கடந்த 2008 முதல் 2013 வரையில் பெட்ரோலிய வருவாய் 83.9% இருந்ததாகவும் 2014 முதல் 2017 வரையில் 81.3 விழுக்காடாகக் குறைந்ததாகவும் 2018 முதல் 2024 75.7 விழுக்காடு மட்டுமே மாநிலத்திற்கு வருவாய் வழங்கப்பட்டிருப்பதாகவும் மக்கள் நலத்திட்டங்களுக்காகவும் பேரிடர் நிதிக்காகவும் அதிகமாகக் காத்திருக்க வைக்கப்படுவதாகவும் Dato' Seri Ahmad Samsuri Mokhtar மடானி அரசாங்கத்தைச் சாட்டினார்.
Menteri Besar Terengganu, Dato' Seri Ahmad Samsuri Mokhtar, menuduh Kerajaan MADANI pimpinan Anwar mencabuli hak negeri-negeri yang ditadbir Perikatan. Beliau membangkitkan isu royalti minyak yang berkurang serta kelewatan dalam agihan dana pembangunan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *