பாரிசான் செத்துவிட்டது! டி.ஏ.பிக்கு ஆட்சி அதிகாரம்! – பெரிக்காத்தான் சாடல்!

- Sangeetha K Loganathan
- 09 Apr, 2025
ஏப்ரல் 9,
பாரிசான் நேசனல் செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் டி.ஏ.பி கட்சியே பாரிசானைக் காத்து வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் Dato’ Seri Hamzah Zainudin தெரிவித்துள்ளார். பேராக் மாநிலத்தின் மெந்திரி பெசாராக இருக்கும் Dato' Seri SAARANI MOHAMAD பாரிசான் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் பேராக்கில் உள்ள 59 சட்டமன்றங்களில் பாரிசான் 8 சட்டமன்றங்களை மட்டுமே வென்றுள்ளது.
பக்காத்தான் கூட்டணியில் இருக்கும் டி.ஏ.பி 24 சட்டமன்றங்களை வென்றிருக்கிறது. பெரிக்காத்தான் 26 சட்டமன்றங்களில் வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் இருக்கிறது என்றும், பேராக்கில் பாரிசான் ஒரு பொம்மையாக மட்டுமே இருப்பதாகவு 24 சட்டமன்றங்களைக் கொண்டிருக்கும் டி.ஏ.பி தான் பாரிசானைக் கட்டுப்படுத்துவதாகவும் Dato’ Seri Hamzah Zainudin தெரிவித்தார்.
பாரிசானின் குடுமி டி.ஏ.பி கையில் இருப்பதால் டி.ஏ.பி தான் பேராக் மாநிலத்தை ஆட்சி செய்கிறது என்றும், பாரிசான் உயிரற்ற பொம்மையாக இருந்து மலாய்க்காரர்களை ஏமாற்றி வருவதாகவும் Dato’ Seri Hamzah Zainudin குறிப்பிட்டுள்ளார். பேராக் மாநிலச் சட்டமன்றங்களில் 8 சட்டமன்றங்களை மட்டுமே வைத்திருக்கும் பாரிசான் கூட்டணி எனும் போரவையில் பழைய எதிர்களுடன் கூட்டு சேர்ந்து இருப்பதாகவும் ஆட்சிக்காகப் பாரிசான் மக்களை மறந்துவிட்டதாகவு தொண்டர்களைக் கழட்டி விட்டு விட்டதாகவும் Dato’ Seri Hamzah Zainudin தெரிவித்தார்.
Dato’ Seri Hamzah Zainudin mengkritik Barisan Nasional (BN) Perak kerana masih mahu memerintah walaupun hanya memiliki sembilan kerusi DUN, sedangkan kuasa sebenar didakwa berada di tangan Pakatan Harapan (PH) yang memegang 24 kerusi. Beliau mempertikaikan dakwaan bahawa DAP ‘menyelamatkan’ UMNO dan menyifatkan kepimpinan sekarang gagal menyuarakan perjuangan sebenar rakyat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *