புகைப்படம் - காணொளி வடிவில் 6,687 ஜேபிஜே புகார்களை பெற்றுள்ளது!

- Muthu Kumar
- 10 Apr, 2025
ஷா ஆலம், ஏப். 10-
கடந்த மாதம் மார்ச் 24ஆம் தேதி தொடங்கி நேற்றுவரை, நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட நோன்பு பெருநாள் சிறப்பு சோதனை நடவடிக்கையில் மை ஜேபிஜே செயலியின் மூலம் புகைப்படம் மற்றும் காணொளி வடிவில் 6,687 புகார்களைச் சாலை போக்குவரத்து துறை, ஜேபிஜே பெற்றுள்ளது.
அவற்றுள், 1,766 இரட்டைக் கோட்டில் வாகனங்களை முந்திச் செல்வது. 1,625 அவசர பாதையில் வாகனங்களைச் செலுத்துவது மற்றும் 843 சமிக்ஞை விளக்கைப் பின்பற்ற தவறியது என மூன்று முக்கிய குற்றங்களில் அதிக எண்ணிக்கையிலான புகார்கள் பதிவாகியுள்ளன.
மைஜேபிஜே செயலியின் புகார்கள் வழங்கும் பிரிவு ஆண்டு முழுவதும் செயலில் இருக்கும். இருப்பினும், பண்டிகை காலத்தின் இரண்டு வாரங்களில் மாதத்திற்கு ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகியிருக்கும் புகார்கள் வழக்கமான எண்ணிக்கையை விட அதிகரித்திருப்பதாக, ஜேபிஜே தலைமை இயக்குநர் ஏடி ஃபட்லி ரம்லி கூறினார்.
“ஓப்ஸ் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி காலம் முழுவதும் ஜேபிஜே 6,687 புகார்களை மைஜேபிஜே செயலியின் மூலம் பெற்றுள்ளது. அவை பண்டிகை காலத்தின் போக்குவரத்து விதிமீறல்களுக்கு உட்பட்டது. அனைத்து புகார்களுக்கும் ஜேபிஜே நடவடிக்கை எடுத்திருப்பதுடன், சம்பந்தப்பட்ட 114 வாகன உரிமையாளர்களுக்கு அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
நேற்று முன்தின இரவு, சிலாங்கூர் மாநில ஜேபிஜேயின், நோன்பு பெருநாள் சோதனை நடவடிக்கையின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் அத்தகவல்களைக் கூறினார்.
அதே காலகட்டத்தில், போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறை, அரச மலேசிய போலீஸ் படை, தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம், கெசாஸ் நெடுஞ்சாலை குத்தகை நிறுவனம் ஆகியவை 1,230 வாகனங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் மூலம் 788 குற்றங்களுக்காக 686 அறிவிக்கைகள் வெளியிட்டுள்ளதாக, டத்தோ ஏடி விவரித்தார்.
JPJ menerima 6,687 aduan melalui aplikasi MyJPJ sepanjang Ops Hari Raya Aidilfitri. Kesalahan utama termasuk memotong di garisan berkembar, guna lorong kecemasan, dan langgar lampu isyarat. Sebanyak 114 notis dikeluarkan kepada pemilik kenderaan terlibat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *