புதன்கிழமை நடைபெறவிருப்பது பிகேஆரின் அவசரக் கூட்டம் அல்ல!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, . 21-

வரும் புதன்கிழமையன்று பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் ஃபூஸியா சாலே நேற்று உறுதிப்படுத்தினார்.

ஆனால், பத்திரிகையொன்று கூறியிருப்பதுபோல் அதுவோர் அவசரக் கூட்டம் அல்ல என்றும் தெளிவுபடுத்தினார். தலைமைத்துவ மன்றத்தின் சில உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், முறையான முன்னறிவிப்புடன் அக்கூட்டம் நடத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கட்சித் தலைவரின் அனுமதியுடன் அக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆயினும், ஏழு நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வழங்கப்பட்டு விட்டதால், அது அவசரக் கூட்டம் என்று கூறப்படுவது தவறு என்று அவர் சுட்டிக் காட்டினார். ஆயினும், நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளன என்பதை அவர் விவரிக்கவில்லை.

தற்போது நடைபெற்றுவரும் பிகே ஆர் கட்சியின் டிவிஷன் தேர்தலில் பரவலாக முறைகேடுகள் நடைபெற்று வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதனை விவாதிப்பதற்காக புதன்கிழமையன்று அவசரக் கூட்டம் நடத்தப்படவுள்ளது என்று
தலைமைச் செயலாளர் விளக்கம் மலேசியாகினி இணையப் பத்திரிகை முன்னதாகத் தெரிவித்திருந்தது.

கடந்த வாரம் நடைபெற்ற சிலாங்கூர் பிகேஆர் டிவிஷன் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்திருப்பதால், எஞ்சியிருக்கும் டிவிஷன் தேர்தல்களை ஒத்திவைக்கும்படி பிகேஆர் கட்சியின் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயில் கோரிக்கை விடுத்திருந்தார்.

Pilihan raya Majlis Pusat PKR akan diadakan pada hari Rabu. Setiausaha Agung Fuziah Salleh menegaskan ia bukan mesyuarat tergempar, sebaliknya diadakan secara sah susulan permintaan ahli, dijangka bincang isu penyelewengan pilihan raya bahagian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *