இந்துக்களை தாம் ஒருபோதும் அவமதிக்கவில்லை - ஜம்ரி வினோத்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 10: இந்துக்களை தாம் ஒருபோதும் அவமதிக்கவில்லை என்று சமய போதகர் ஜம்ரி வினோத் நேற்று இரவு தெரிவித்துள்ளார்.தனது எழுத்துகள் மூலம் யாரையும் அவமதித்ததாக எந்த நீதிமன்றமும் தீர்ப்பளிக்கவில்லை. மேலும் எனது பதிவை நீக்குமாறு எனக்கு அறிவுறுத்தும் வகையில் எந்த நீதிமன்ற உத்தரவும் இல்லை என்று அவர் கூறினார்.

ராயர் கோருவதற்காக அல்ல சட்டத்தின் விதியை தாங்கள் பின்பற்றுகிறோம் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்  ஆர்எஸ்என் ராயரைக் குறிப்பிட்டு அவர் கூறினார்.ஜம்ரியின் சர்ச்சைக்குரிய பதிவு, பேஸ்புக்கால் நீக்கப்பட்டதாகவும், பின்னர் மீண்டும் தோன்றிய பிறகு, ஜம்ரியைக் கைது செய்ய டிஏபி அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

சம்பந்தப்பட்ட தேசத்துரோக மற்றும் பொறுப்பற்ற பதிவை மீண்டும் இடுகையிட்டதன் மூலம் சட்டத்தை மீறியதற்காக ஜம்ரி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று ராயர் கூறினார்.மேலும், ஜம்ரி மனந்திருந்தாதவர் என்றும், மலேசியாவில் இன மற்றும் மத பதற்றத்தைத் தொடர்ந்து தூண்டிவிடுகிறார் என்றும் ராயர் குற்றம் சாட்டினார்.

Penceramah agama Zamri Vinoth menegaskan beliau tidak pernah menghina penganut Hindu dan tiada mahkamah mengarahkannya memadam sebarang hantaran. Ahli Parlimen RSN Rayer menggesa tindakan undang-undang terhadap Zamri kerana memuat naik semula hantaran kontroversi yang mencetuskan ketegangan kaum dan agama.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *