சட்டப்பூர்வ உரிம அவசியத்தைப் பற்றித் தெரியாமல் நடித்த வணிகரின் செயல்!

- Muthu Kumar
- 18 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்.18-
கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை விற்கும் சட்டப்பூர்வ உரிமத்தைக் கொண்டிருக்கும் அவசியத்தைப் பற்றித் தெரியாமல் நடித்த பிரிக்பீல்ட்ஸ் மளிகைக் கடை வணிகரும் உணவுக் கடை வணிகருமான ஒருவரின் தந்திரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் அத்தலம் 1 ஆண்டுக்கும் மேல் செயல்பட்டு வருவது அம்பலமானது.
கடந்த புதன்கிழமை மேற்கொண்ட விசாரணைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதைத் தவிர்க்கத் தான் இப்போதுதான் வணிகம் செய்யத் தொடங்கியிருப்பதாகக் காரணம் கூறினார் என்று கோலாலம்பூர் உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்கான அமைச்சின் தலைமை அமலாக்க அதிகாரி முகமட் ஷாரான் முகமட் அர்ஷாட் தெரிவித்தார்.
ஓராண்டுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் இத்தலத்திற்கு உரிம நிபந்தனை இருப்பது தெரியாது என்று கூறுவது சற்றும் நியாயமில்லை.வணிகத்தைத் தொடங்குவதற்கு முன்பு சட்டத்தின் தேவைகளை அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
கோலாலம்பூர் மாநகர் மன்றம், குடிநுழைவுத் துறையுடன் இணைந்து 8 தலங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் அத்தலமும் ஒன்றாகும் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது முகமட் ஷாரான் முகமட் அர்ஷாட் குறிப்பிட்டார்.
Seorang peniaga runcit dan makanan di Brickfields disiasat selepas didapati menjalankan perniagaan lebih setahun tanpa lesen sah. Beliau cuba mengelak tindakan dengan mendakwa baru memulakan perniagaan. KPDN menegaskan keperluan patuhi undang-undang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *