ஒப்பந்தத்தில் அரசாங்கம் விதித்த நிபந்தனைகள் கடுமையானவை, நியாயமற்றவை !

- Muthu Kumar
- 10 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 10:
எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு சமமான ஒதுக்கீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமான MoU வை நிராகரிக்க கூட்டணிக்கு சரியான காரணங்கள் இருப்பதாக பெரிகாத்தான் நேஷனல் (PN) தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
பெர்சாத்து தலைவர் முகைதீன், அந்த ஒப்பந்தத்தில் அரசாங்கம் விதித்த நிபந்தனைகள் மிகவும் கடுமையானவை மற்றும் நியாயமற்றவை என்று கூறினார்.
மூவார் எம்.பி சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் அரசாங்கத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டதாக துணைப் பிரதமரின் அறிக்கையை தாம் படித்ததாகவும், அது அவரது விருப்பம் என்றும் முகைதீன் கூறினார்.
ஆனால் முன்மொழியப்பட்ட விதிமுறைகளை ஏற்காததற்கு PN-க்கு சரியான காரணங்கள் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
நிபந்தனைகள் அசாதாரணமானவை என்பது மட்டுமல்லாமல் மிகவும் கடுமையானவையாக இருக்கின்றன. RM200,000 அல்லது RM300,000 பெறுவதற்கு நாம் எல்லாவற்றையும் பக்காத்தான் ஹராப்பனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தோன்றுகிறது என்று அவர் நேற்றிரவு நெகிரி செம்பிலானில் தனது கட்சி நடத்திய ரமலான் நிகழ்வில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
PN menolak MoU peruntukan sama rata kepada MP pembangkang kerana syarat kerajaan terlalu ketat dan tidak adil, kata Muhyiddin Yassin. Beliau mendakwa PN perlu menyerahkan segala-galanya kepada PH hanya untuk menerima peruntukan kecil. Syed Saddiq menerima syarat itu atas pilihannya sendiri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *