கோல லங்காட் மக்கள் நலப் பாதுகாப்பிலும் மேம்பாட்டிலும் மாவட்ட இலாகாவின் பங்களிப்பு தொடரும்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

பந்திங், ஏப்.20-

கோல லங்காட் மக்கள் நலப் பாதுகாப்பு குடியிருப்புப் பகுதிக் கண்காணிப்பு மற்றும் அதன் மேம்பாட்டுத் திட்டங்களை உள்ளடக்கிய திட்டங்களில் தமது நடவடிக்கையும் பங்களிப்பும் தொடரும் என்று மாவட்ட ஆட்சியர் புவான் தெங்கு ரோஹானா தெங்கு நவாவி தெரிவித்தார்.

தாம் பதவி ஏற்று சில மாதங்களே கடந்தாலும் மாவட்டத்தில் மக்கள் மத்தியில் நிலவி வரும் நிலப்பிரச்சினை, அனுமதி பெறாமல் மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டு வரும் சிலரது அத்துமீறல் நடவடிக்கைகளை சட்ட ரீதியாக முன்னெடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மாவட்ட இலாகா நடவடிக்கையின் போது எல்லை மீறுபவர்களின் செயல்களைத் தடுத்து நிறுத்தும் பணிகளை அமலாக்கப் பிரிவினரும் அதே வேளையில் வரம்பு மீறிச் செயல்படுவோரை காவல் துறையினரும் கவனித்துகொள்வார்கள் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

நேற்று முன்தினம் காலையில் இங்கு மாவட்ட இலாகாவில் உள்ள தமது அலுவலகத்தில் மனிதவள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான், பந்திங் சட்டமன்ற மக்கள் மையத்தின் அதிகாரிகள் மற்றும் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் நடேசன் சுப்ரமணி ஆகியோருடன் நடத்தப்பட்ட மாதாந்திரச் சந்திப்பில் தெங்கு ரோஹானா மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

Pegawai Daerah Kuala Langat, Tengku Rohana, komited terus menyumbang dalam projek kesejahteraan rakyat dan pemantauan kawasan perumahan. Beliau menegaskan tindakan undang-undang diambil terhadap pelanggaran pembangunan haram dan isu sempadan tanah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *