Sin Chew Daily பத்திரிகைக்கு பேரரசர் கண்டனம்!

- Shan Siva
- 16 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல் 16: Sin Chew Daily தனது செய்தித்தாளின் நேற்றைய பதிப்பின் முதல் பக்கத்தில் தேசியக் கொடியைத் தவறாகச் சித்தரித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
Sin Chew டெய்லியின்
நிர்வாகமும் தலையங்கத் துறையும் அச்சிடுவதற்கு முன்பு மிகவும் விழிப்புடன் இருந்து
அனைத்தையும் மதிப்பாய்வு செய்திருக்க வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிமின்
அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்,
மலேசியாவின்
இறையாண்மை மற்றும் அடையாளத்தின் சின்னம் நமது தேசியக் கொடி என்பதை வலியுறுத்திய
சுல்தான் இப்ராஹிம், மலேசியர்கள்
கொடியின் மீது மிகுந்த பெருமையையும் தேசபக்தியையும் கொண்டுள்ளனர் என்றார்.
உள்ளூர் சீன மொழி
செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டது போல் பிறை நிலவு இல்லாமல் தேசியக் கொடியைக் காண்பிப்பதில் ஏற்பட்ட தவறு பொதுமக்களின் உணர்திறனைத் தூண்டும் மற்றும்
ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்.
Sin Chew Daily நேற்று அதன் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் தேசியக் கொடியை பிறை நிலவு இல்லாமல் தவறாகச் சித்தரித்த ஒரு விளக்கப்படத்திற்காக மன்னிப்பு கேட்டது. அதோடு அது தொழில்நுட்பத் தவறு என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது!
Sin Chew Daily tersilap paparkan bendera Malaysia tanpa bulan sabit, menimbulkan rasa tidak puas hati rakyat. Sultan Ibrahim menyifatkan kesilapan itu sebagai tidak boleh diterima. Akhbar tersebut mohon maaf dan menyatakan ia berpunca daripada kesilapan teknikal semata-mata.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *