சிறுத்தைப் புலி சாலையைக் கடந்த காணொளி பழையது!

- Muthu Kumar
- 07 Apr, 2025
(நமது நிருபர்)
ஜெலுபு, ஏப்.7-
ஜெலுபு, புக்கிட் தங்காவில் சிறுத்தைப் புலி ஒன்று சாலையைக் கடந்து சென்ற காணொளி ஒன்று பரவியுள்ளது.இருந்த போதிலும் இச்சம்பவம் ஜெலுபு மாவட்டத்தில் நிகழவில்லை என்று நெகிரி செம்பிலான் மாநில வனவிலங்குப் பாதுகாப்புத் துறை மற்றும் தாமான் நெகாரா பெர்ஹிலித்தான் இயக்குநர் ஃபைஸால் இஸாம் பிக்ரி தெரிவித்தார்.
இக்காணொளியில் சாலை மிகவும் வளைவாக இருப்பதால் புக்கிட் தங்காவிலுள்ள சிரம்பான்-கோலா கிலாவாங் சாலையில் சிரம்பானை நோக்கிச் செல்லும் வாகனங்கள் மிகவும் நெரிசலாக இருக்கின்றன.அதில் சிறுத்தைப் புலி கடந்து செல்லும் சம்பவம் நிகழ்ந்திருக்காது.
அப்பாதை மிகவும் நெரிசலாவதற்கு முன்பு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் அங்கு ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டோம்.அந்த வகையில் உண்மை உறுதிப்படுத்தப்படாத காணொளிகளைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அது பலரைத் தொந்தரவுக்கு உள்ளாக்கும் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது ஃபைஸால் இஸாம் பிக்ரி குறிப்பிட்டார். இதுகுறித்து மேற்கொண்ட சரிபார்ப்பின்படி இக்காணொளிச் சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டில் சரவா மாநிலத்தில் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
Satu video menunjukkan seekor harimau kumbang melintasi jalan di Bukit Tangga, Jelebu telah tular, namun Jabatan Perlindungan Hidupan Liar Negeri Sembilan menafikan kejadian itu berlaku di situ. Video tersebut dipercayai dari Sarawak pada tahun 2021.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *