பிலிப்பைன்ஸ் தொழில்நுட்ப நிபுணர்கள் பினாங்கு மாநகர் மன்றத்தினருடன் சந்திப்பு!

- Muthu Kumar
- 22 Apr, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு. ஏப். 22-
பிலிப்பைன்ஸ் நாட்டின் சிபு நகர் தொழில் நுட்ப நிபுணத்துவ ஆய்வுக் குழுவினர் பினாங்கு மாநகர் மன்ற துறை சார்ந்த வல்லுநர்களுடன் இங்கு நடத்திய கருத்துப் பரிமாற்றக் கூட்டத்தில், திறன் மதிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வு அம்சங்கள் தொடர்பான வாதங்கள் நடத்தி,இரு தரப்புக்குமிடையே சுமுக உடன்பாடு கண்டனர்.
சிபு நகர் தொழில் நுட்ப நிபுணத்துவக் குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் எலியாஸார் பெர்சேல்ஸ் மற்றும் சுற்றுலாப் பிரிவு அதிகாரி மரிஸ்தேலா ராபோர் ஆகிய
இருவரின் கீழ் 12 பேர் அடங்கிய சம்பந்தப்பட்ட குழுவினர், புராதனச் சிறப்பு மிக்க ஜோர்ஜ்டவுன் நகரின் வரலாற்றுக் கூறுகள் குறித்தும் இங்கு கலந்தாய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பினாங்கு மாநில மாநகர் மன்றத் தலைவர் டத்தோ அ.ராஜேந்திரன் இந்த நிபுணத்துவக் குழுவினரை சந்தித்து வரவேற்பளித்த பின்னர், மேற்படி கருத்துப் பரிமாற்றக் கூட்டத்திற்கும் பொறுப்பேற்ற, பிலிப்பைன்ஸ் தரப்பினரின் ஐயங்களுக்கு தகுந்த விளக்கங்களை அளித்ததோடு, மாநில மாநகர் மன்றத்தின் திறன் மேம்பாட்டு அம்சங்களையும் அவர்களிடத்தில் எடுத்துரைத்தார்.
மேலும் இரு தரப்புக்குமிடையே நிகழ்ந்த விவாதக் கலந்துரையாடலில்,ஜோர்ஜ்டவுன் -சிபு இடையே. சுமுக நட்புறவைப் பேணுவதற்கும் புரிந்துணர்வு காணப்பட்ட அதே வேளையில், அதுவே மலேசியா பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளுக்குமிடையே பற்பல விதங்களிலான நல்லிணக்க அம்சங்களுக்கும் வித்திடுவதற்கு உடன்பாடு காணப்பட்டது.
மாநில நினைவு நகர் மன்றத்தின் மூத்த இயக்குநர் டாக்டர் மாட் பென்ஸன் மற்றும் மரபியல் மேம்பாட்டுக் குழு இயக்குநர் லீ திட் குன் ஆகிய இருவரும் உடன் பங்கேற்றிருந்த இந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பேராளர்கள் யாவரும், இங்கிருக்கும் புராதனச் சிறப்புமிக்க சில பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Delegasi teknikal Cebu, Filipina mengadakan perbincangan bersama pakar Majlis Bandaraya Pulau Pinang mengenai teknologi dan warisan George Town. Kedua-dua pihak bersetuju memperkukuh hubungan serta kerjasama antara Malaysia dan Filipina dalam pelbagai aspek.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *