மற்ற இனத்தினரைப் பழிக்கும் செயல் பாவம்! - Datuk Seri Dr Wan Azizah Wan Ismail

top-news

ஏப்ரல் 21,


மலேசியர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் செயல்படும்படியும் அதனைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்றும் பிரதமரின் மனைவியும் Bandar Tun Razak நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Seri Dr Wan Azizah Wan Ismail நினைவுருத்தினார். எந்த மதமும் பிற மதத்தைப் பற்றி அவதூறுகளைப் பரப்பும்படி வலியுறுத்தவில்லை என்பதை அனைத்து மலேசியர்களும் உணர வேண்டும் என்றும் மலேசியா பல்லின மக்களின் பல்லினக் கலாச்சாரத்தின் அடையாளமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உங்களால் ஒரு சில மத நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனில் அதனைக் கடந்து விடுங்கள். அது தொடர்பாக ஒரு வாக்குவாதத்தைத் தொடங்கி இன மத நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களை முன்னெடுக்க வேண்டாம் என Datuk Seri Dr Wan Azizah Wan Ismail வலியுறுத்தினார். பல்வேறு இன மத நம்பிக்கைகள் கொண்டிருந்தாலும் மலேசியர் எனும் குடியுரிமையின் கீழ் நாம் அனைவரும் ஒன்று தான் என்பதை அனைத்து சமூகத்தினரும் புரிந்து செயல்பட வேண்டும் என Datuk Seri Dr Wan Azizah Wan Ismail வலியுறுத்தினார்.

Datuk Seri Dr Wan Azizah Wan Ismail menyeru rakyat Malaysia agar mengelakkan tindakan yang memecahbelahkan keharmonian kaum dan agama. Beliau menekankan kepentingan menghormati kepercayaan orang lain demi mengekalkan perpaduan sebagai rakyat Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *