சட்டத்தின் அடிப்படையிலே சின் சியூ பத்திரிகை ஆசிரியர்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஏப். 22-

பத்திரிகையின் முதல் பக்கத்தில் ஜாலுர் கெமிலாங்கின் முழுமையற்ற விளக்கப்படம் பிரசுரிக்கப்பட்ட விசாரணைக்கு உதவுவதற்காக சின் சியூ டெய்லியின் தலைமை ஆசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர் கைதானது அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம்மின் நடவடிக்கை சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும்.

சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, சட்டப்படி எந்தவொரு தரப்பினரையும் தடுத்து வைக்க போலீசாருக்கு அதிகாரம் உள்ளதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.உள்துறை அமைச்சு, அரச மலேசிய போலீஸ் படை, மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி ஆகியவை மூன்று வெவ்வேறு கோணங்களில் இருந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தும் என்று டத்தோ ஃபாஹ்மி கூறினார்.



முதல் குற்றம் அல்லது இந்த விஷயம் முதன்முதலில் சின் சியூவில் பிரசுரிக்கப்பட்ட பதிப்பில் காணப்பட்டது. எனவே, 1984ஆம் ஆண்டு உள்துறை அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டத்தின் முதல் கட்டமாகவும் இது உள்ளது. இரண்டாவதாக, சின்னங்கள், பெயர்களின் அடிப்படையில், 1963ஆம் ஆண்டு முறையற்ற பயன்பாட்டைத் தடுக்கும் சட்டம், இன்னும் பல சட்டங்களின் கீழ் மீறல் இருந்ததாக நம்பப்படுகிறது', என்று அவர் கூறினார்.


நேற்று, ஜொகூர் பாருவில் உள்ள தாமான் ஸ்ரீ ஸ்கூடாயில் தேசிய தகவல் பரப்பு மையமான நாடியின் தகவல் மையத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.இதனிடையே, ஜாலுர் கெமிலாங்கின் முழுமையற்ற விளக்கப்படத்தை பிரசுரித்தது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, சின் சியூ டெய்லியின் தலைமை ஆசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டதாக கடந்த வியாழக்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Akhbar Sin Chew Daily disiasat berikutan penerbitan imej Jalur Gemilang tidak lengkap. Ketua dan timbalan ketua editor ditahan di bawah undang-undang PDRM. Menteri Komunikasi sahkan tindakan sah dan siasatan melibatkan pelbagai agensi kerajaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *