நஜிப் மீதான கள்ளப் பணப்பரிமாற்றக் குற்றச்சாட்டுகள் கைவிடப்படுமா?மே 6ஆம் தேதி தீர்ப்பு!

- Muthu Kumar
- 11 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 11-
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு கோடியே எழுபது லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட இதர மூன்று கள்ளப்பணப்பரிமாற்றக் குற்றச்சாட்டுகளை கைவிடும்படி டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் விண்ணப்பம் செய்துள்ளார். அந்த விண்ணப்பம் மீதான முடிவு மே மாதம் ஆறாம் தேதி தெரிய வரும்.
நஜிப்பின் அந்த விண்ணப்பம் மீதான முடிவு அறிவிக்கப்படுவதற்குள் புதிய மேலாண்மை தேதியை நிர்ணயிக்கும்படி துணை அரசு வழக்கறிஞர் முகமது அஷ்ரோப் அட்ரின் கமாருல் முறையிட்டதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி கே.முனியாண்டி அந்த தேதியை நிர்ணயித்தார். தற்காப்புத் தரப்பினர் சார்பில் சட்டத்துறைத் தலைவரின் அலுவலகத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை மற்றொரு கடிதம் அனுப்பப்படும் என்று நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமது ஷாபி அப்துல்லா நேற்று தெரிவித்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்டில் சட்டத்துறைத் தலைவரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நஜிப்பினுடைய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் நிலை என்ன என்பதை அறிவிக்கக்கோரி அக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த 2014ஆம் ஆண்டில் மூன்று வங்கிகளிலிருந்து சட்டவிரோதமாக இரண்டு கோடியே எழுபது லட்சம் வெள்ளியை பெற்றதாக நஜிப் மீது மூன்று கள்ளப் பரிமாற்றக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகப்பட்சம் ஐம்பது லட்சம் வெள்ளி அபராதம் அல்லது ஐந்தாண்டுகள் வரைக்குமான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படலாம்.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு கோடியே இருபது லட்சம் வெள்ளியைக் கையாடிய குற்றத்திற்காக நஜிப் தற்போது காஜாங் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
அக்குற்றத்திற்காக அவருக்கு 12ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 21கோடி வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. ஆயினும், அரச மன்னிப்பு வாரியத்திடம் விண்ணப்பம் செய்ததைத் தொடர்ந்து, அவரின் சிறைத்தண்டனை ஆறு ஆண்டுகளாகவும் அபராதத்தொகை ஐந்து கோடி வெள்ளியாகவும் குறைக்கப்பட்டது.
Datuk Seri Najib Razak memohon mahkamah menggugurkan tiga pertuduhan pemindahan wang haram berjumlah RM27 juta milik SRC International. Mahkamah Tinggi menetapkan keputusan pada 6 Mei. Najib kini menjalani hukuman enam tahun penjara selepas pengurangan daripada 12 tahun atas kesalahan berkaitan SRC.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *