சிறுவனை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்திய மசூதி இமாம் கைது!

- Sangeetha K Loganathan
- 23 Apr, 2025
ஏப்ரல் 23,
கடந்த 3 ஆண்டுகளாக 13 வயது சிறுவனை ஓரினச் சேர்க்கையாலும் பாலியல் வன்கொடுமை செய்ததாக Bukit Rambai மசூதியில் இமாம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது 13 வயதாகும் அச்சிறுவன் தனது 10 வயதிலிருந்தே சம்மந்தப்பட்ட இமாம் தம்மைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தனது 35 வயது தாயாரிடம் தெரிவித்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக மத்திய மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள 28 வயது இமாம் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோலாலம்பூரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் வறுமையின் காரணமாக மசூதியில் தங்கியதாகவும் விடுமுறைக்கு வீடு திரும்பிய சிறுவனின் உடலில் உள்ள காயங்களை அடையாளம் கண்ட 35 வயது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் 28 வயது இமாம் 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும்படி Majistret நீதிபதி Uthman Abd Ghani உத்தரவிட்டுள்ளார்.
Polis telah menahan seorang warga Thailand yang bekerja sebagai imam di masjid Bukit Rambai atas kes meliwat dan mencabul seorang mangsa berusia 13 tahun selama tiga tahun lalu. Ibu kepada mangsa melaporkan kes ini pada Polis setelah melihat kecederaan pada badan anaknya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *