புத்ரா ஹைட்ஸ் பொய்த்தகவல்-சமூக ஊடகம் மீது சுகாதார அமைச்சு போலீசில் புகார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 11-

புத்ராஹைட்ஸ் பகுதியில் அண்மையில் எரிவாயுக் குழாய் வெடித்து தீப்பற்றிய சம்பவத்தில் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகச் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தகவல்கள் பொய்யானவை என்பதால் அந்த ஊடகங்களுக்கு எதிராகச் சுகாதார அமைச்சு போலீசில் புகார் செய்துள்ளது.

அது மட்டுமன்றி, அந்த விவகாரம் குறித்து மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடமும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது என்று அந்த அமைச்சு தெரிவித்தது.அச்சம்பவத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மரணங்கள் பற்றி பொது மருத்துவ மனைகளிலிருந்தோ தனியார் மருத்துவ மனைகளிலிருந்தோ இதுவரை தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இதுபோன்ற போலித் தகவல்களை பொறுப்பற்ற தரப்பினர் பரப்பி வருகின்றனர்.

இதுபொதுமக்களிடையே சினத்தை ஏற்படுத்தும். அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அது எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இம்மாதம் முதல் தேதியன்று காலை 8.10 மணிக்கு எரிவாயுக் குழாய் வெடித்ததில் அதிலிருந்து முப்பது மீட்டர் உயரத்திற்குத் தீப்பிழம்பு கிளம்பியது. அதன் வெப்பம் ஆயிரம் செல்சியஸ் டிகிரியைத் தாண்டும் வகையில் கடுமையாக இருந்தது.எட்டுமணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 150 பேர் மருத்துவச் சிகிச்சை பெற்றனர். அவர்களுள் 127பேர் நேரடியான தீக்காயங்களுக்கும் இதர காயங்களுக்கும் ஆளானவர்கள். மேலும், 18 பேர் மனஉளைச்சல், பீதி போன்றவற்றுக்கு ஆளானவர்கள் ஆவர். ஐவருக்கு சிகிச்சை தேவைப்படவில்லை.

Satu letupan paip gas di Putra Heights mencetuskan api besar, namun tiada kematian dilaporkan. Kementerian Kesihatan menafikan khabar angin mengenai kematian dan telah membuat laporan polis terhadap penyebar berita palsu. 150 orang cedera, lima tidak memerlukan rawatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *