இறக்குமதி பெர்மிட் நிபந்தனை மீறல்-14 டன் மிளகாய் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

அலோர் ஸ்டார். 21-

புக்கிட் காயு ஹீத்தாமிலுள்ள மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு நிறுவனம் (ஏ.கே.பி.எஸ்.) கடந்த வெள்ளிக் கிழமை புக்கிட் காயு ஹீத்தாமில் உள்ள குடிநுழைவு, சுங்கம், பாதுகாப்பு, தனிமைப்படுத்தல் வளாகத்தில் மேற்கொண்ட சோதனையில் 42,000 வெள்ளி மதிப்புள்ள 14,000 கிலோகிராம் மிளகாய் கைப்பற்றப்பட்டது.அண்டை நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட புதிய காய்கறிகள் அடங்கிய கொள்கலனை இரவு 9.40 மணியளவில் அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றைப் பறிமுதல் செய்ததாக ஏ.கே.பி.எஸ். ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

2008ஆம் ஆண்டு கூட்டரசு விவசாய சந்தை வாரிய விதிமுறைகள் அல்லது செல்லுபடியாகும் 3பி இணக்கச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜி பி.எல். (தரப்படுத்துதல், பேக்கேஜிங், லேபிளிங்) இறக்குமதி அனுமதி நிபந்தனைகளை அந்த உணவுப் பொருள் பூர்த்தி செய்யவில்லை என்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக்கிட் காயு ஹீத்தாம் வளாகத்தில் இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களில் வழக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் சட்டம் 728 இன் பிரிவு 15(1) இன் கீழ் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது என அது குறிப்பிட்டது.பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் 2011ஆம் ஆண்டு மலேசிய தனிமைப்படுத்தல், ஆய்வு சேவைகள் சட்டத்தின் கீழ் மேல் நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டன.

Sebanyak 14,000kg cili bernilai RM42,000 yang diimport dari negara jiran dirampas di Bukit Kayu Hitam kerana tidak memenuhi syarat permit import sah. Rampasan dibuat oleh AKBS dalam pemeriksaan rutin di kompleks sempadan pada malam Jumaat lalu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *